திருப்பதி ஸ்ரீ கோதண்ட ராமசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 12.05 மணி முதல் 12.45 மணி வரை தனுர்மாச கைங்கர்யங்கள் நடைபெறும். 12.45 முதல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு தோமாலை, கொலுவு போன்ற சேவைகள் நடைபெறுகிறது. நள்ளிரவு 1.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்புகள் மற்றும் வரிசைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்து அறநிலையத் திட்டங்களின் கீழ் ஆன்மிக பக்தி இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். என்று கூறப்பட்டுள்ளது.