தூத்துக்குடியில் வக்கீல் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காலையில் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது அருவாளால் தாக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர்.
காலையில் தனிப்படை போலீசாருக்கு கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெயபிரகாஷ்(37) புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாரை விளக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் தட்டப்பாறை விளக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.அப்போது அவனை பிடிக்க சென்றனர்.
அப்போது ஜெயப்பிரகாஷ் அறிவாளை கொண்டு போலீசாரை நோக்கி வெட்டினார். இதில் தனிப்படை எஸ்.ஐ. ராஜ பிரபு கையில் காயம் ஏற்பட்டது தனிப்படை போலீஸ் சுடலைமாடியின் மீதும் காயம் ஏற்பட்டது உடனே எஸ்.ஐ ராஜ பிரபு ஜெயபிரகாஷ் முட்டுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டவுடன் மற்ற போலீசார் ஜெயப்பிரகாஷ் மடக்கி பிடித்தனர்.
உடனே போலீசார் அவர்களை மீட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் சம்பந்த இட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த போலீஸாரிடம் நலம் விசாரித்தார்.