தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சிசிக்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார். மருத்துவர்கள் கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். சிறுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இருந்தது. சிறுமியின் தந்தையான முனியசாமி (வயது 39) பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது எனக் மிரட்டியுள்ளார்.
மேலும் சிறுமியை காதலிப்பதாக கூறி வந்த ஓட்டப்பிடாரத்தை அருத்த மேட்டூர் வ.உ.சி காலனியைச் சேர்ந்த ராசுக்குட்டி என்பவரின் மகன் அழகு என்ற அறிவுமதி(வயது 19) என்ற இளைஞரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்தச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தந்தை முனியசாமி, காதலிப்பதாக கூறி சிறுமிக்கு தொல்லைக்கொடுத்த அறிவுமதி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.