தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு சட்ட மசோதாக்களும், நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாகவே பல அரசியல் கட்சிகள் எம்.எல்.ஏக்களை கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை தொடங்க உள்ள  கூட்டத்தில்,  இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான சட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை, உள்ளிட்ட பல ஆவணங்கள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஒரு கூட்ட தொடருக்கும் மற்றொரு கூட்டத்தொடருக்கும் ஆன இடைவெளி ஆறு மாதங்களுக்கு மேல் இருக்க கூடாது. அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here