திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூர் பேரூராட்சியில் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிட திறப்பு விழா புதிய மருந்தகம் வைப்பறை கட்டட அடிக்கல் நாட்டு விழா பொது கழிப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா கீரனூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இரண்டு நியாய விலை கடைகள் அடிக்கல் நாட்டு விழா 1கோடிக்கும் மதிப்பிலான பணிகளை பழனி உதவி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் மாவட்ட பொது நலம் அனிதா வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அடிக்கல் நட்டு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அரசு அர. சக்கரபாணி கூறியதாவது:
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிநீர் பிரச்சனையை முற்றிலுமாக ஒழித்திட காவேரி கூட்டு குடிநீர் திட்டம் ஜனவரி 31ஆம் தேதி டெண்டர் விடப்பட்டு பல்வேறு பணிகள் துவங்க இருக்கின்றன கீரனூர் பொருத்த அளவிலே மேலும் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் எனவும் ,தமிழ்நாட்டு அளவில் 26 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவக்கி வைத்திட தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்து உள்ளார்கள் அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்க்கம்பட்டி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்த 1545 அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
இது மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார் கீரனூர் பேரூராட்சி பொருத்த அளவில் பழனி திருக்கோயில் சார்பாக இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொது மண்டபம் கட்டித் தரப்படும் எனும் தெரிவித்தார் இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பொன்ராஜ் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி பேரூராட்சி மன்ற தலைவர் கருப்புசாமி துணைத்தலைவர் அப்துல் ஹக்கீம் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி ஒன்றிய செயலாளர் நா. சுப்பிரமணி இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் பேரூர் கழகச் செயலாளர் அன்பு என்ற காதர் பாட்ஷா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன் பழனி வட்டாட்சியர் சசி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஊராட்சி செயலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்னலட்சுமி நன்றி தெரிவித்தார்.