மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இயக்கிஉள்ள திரைப்படம் இராவண கோட்டம். இதில், சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டு தெருங்கள் இருக்கின்றன. மேலத்தெரு, கீழத்தெரு என்றால், மேல்சாதி, கீழ்சாதி என்று பொருள் அதை நேரடியாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார். மேலத்தெருவில் பண்ணையார் பிரபுவின் மகன் சாத்தனு பாக்யராஜ். அதே போல கீழத்தெருவில் இருக்கும் இளவரசனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் கருவேலம் முள் செடிகள் அதிகமாக வளர்ந்து அந்த நிலத்தடி நீரை குடித்துவிடுகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பஞ்சத்திற்கு கருவேல மரம்தான் காரணம் என்பது தெரியவர, கிராம மக்கள் இணைந்து கருவேல மரங்களை வெட்டுகிறார்கள்.

ஆனால், கார்ப்பரேட் கம்பெனி ஒன்றை கிராமத்தில் இயற்கை வளத்தை சுரண்ட அனுமதிக்கவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இரு சமூகத்திடையே கலவரத்தை ஏற்படுத்துகிறது. காதல் காட்சியில் சாந்தனு கயல் ஆனந்தியை காதலிக்கிறார். அதே நேரம் இளவரசனு ஆனந்தியை காதலிப்பதால், இருவரின் நட்பிலும் விரிசல் ஏற்படுகிறது. பிறகு அமைச்சரின் உத்தரவின் பேரில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த  உள்ளூர் எம்.எல்.ஏ களமிறங்கி என்ன செய்தார்? கிராமம் என்ன ஆனது ? என்பதே கதை..

ஒற்றைக் கையிழந்த வில்லனாக வரும் நடிகர் கதைக்குத் தேவையானதை செய்து மிரட்டி கவனம் ஈர்த்துள்ளார். சாதீய கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் எனும் டைட்டில் கார்டுடன் தொடங்கினாலும்,  எங்க அய்யா பாடல், பிரபுவை சித்தரிக்கும் விதம் உள்ளிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான துதியாகவே மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. முந்தைய படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களால்  பிரபுவின் அறிமுகக்காட்சி பின்னணியில் அம்பேத்கர், பெரியார் படங்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படம் ஏன் வைக்கவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் அவர்கள் காமராஜர் காலத்தில் தான் கருவேலம் விதை தூவபட்டது என்று தவறான கருத்தை பேசிவிட்டார். இந்த படத்தில் பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்திவிட்டார் என்று அரசியல்வாதிகள், நாடார் அமைப்புகள் கொந்தளித்து இருக்கின்றனர். படத்தின் கதையில் ஜாதி வெறியை தூண்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் எப்படிபட்ட மாபெரும் தலைவர் என்று உலகத்திற்கே தெரியும் அவரை இழிவுபடுத்தி ஒரு கதை வெற்றி அடையுமா? 

மொத்தத்தில் இந்த  இராவண கோட்டம் ஜாதி வெறி ஆட்டம்….. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here