தயாரிப்பு : பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : நாசர், ஜெயக்குமார், ‘தலைவாசல்’ விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, வினோதினி மற்றும் பலர்
இயக்கம் : முகமத் ஆசிப் ஹமீது
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
திரை விமர்சனம்:
காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது.
சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது. உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விசயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் என்ன நடந்தது? என்பதே கதை.
முதல் பாதி திரைக்கதையை அனுபவிக்க நடிகர் ஜெயக்குமார் ஆக்கிரமிக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையை நாசர் ஆக்கிரமித்திருக்கிறார். இவர்களைக் கடந்து படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை திரையில் செய்திருக்கிறார்கள்.
கதை ஒரே குழப்பமாக நகர்வது தான் ரசிகர்களை சோர்வு அடைய வைக்கிறது…..
தி அக்காலி- சாத்தான் பிடி