முதல் காட்சியிலேயே ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிளாக பசுபதியை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். எதையும் வித்தியாசமாக செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் நபராக சுப்ரமணியை காட்டியிருக்கிறார்கள்.
தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 57 வயது மூதாட்டியான ரோகிணி காணாமல் போகிறார். மூதாட்டி தங்கபொண்ணுக்கு (ரோகிணி) 4 மகள்கள், ஒரு மகன். தனது அப்பத்தாவை கண்டுபிடித்து தருமாறு கிஷோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவருடன் சேர்ந்து காவலர் பசுபதி ரோகிணியை தேடி கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்கிறார். இறந்த தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போட, திடீரென்று தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.
காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலர் பசுபதி இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து, தண்டட்டியை திருடியது யார்? என்பதை நகைச்சுவையோடும், காதலோடும் சொல்வது தான் ‘தண்டட்டி’ படத்தின் மீதிக்கதை…..
அந்த தண்டட்டிக்கு பின்னால் இருக்கும் கதையை இயக்குநர் முன்பே கூறிவிட்டதால் நம்மையும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. நிலைமை சீரியஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் வரும் காமெடி ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது. கிடாரிப்பட்டி கிராமத்துக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு ஏற்ற காட்சிகள் இல்லாதது சற்று குறையாக இருந்தாலும், அந்த குறையை தண்டட்டிக்காக ரோகிணியின் மகள்கள் போடும் சண்டை சரி செய்து திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. கிளைமேக்ஸ் காட்சி பார்க்கும் போது அனைவருக்கும் காதல் அலை அடிக்கும்……
இந்த ‘தண்டட்டி’ தீ காதல்…..
Rating- 4/5