செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 22-ந்தேதியுடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனுவை வாபஸ் கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 23,988 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் களத்தில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 14,571 பேர் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.