மருந்துகளின் விலை உயர்வு?!
ஏப்ரல் 1 முதல் மருந்துகளின் விலை 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
2020ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் விலையை 0.5 சதவீதம் உயர்த்திக்கொள்ள தேசியமருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மருந்துகளின் உற்பத்தி செலவு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால் மருந்தின் விலையை 20 சதவீதம் உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, 2020 ஆண்டுக்கான மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் மருந்து விலையை 0.5% உயர்த்திக்கொள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 1 முதல் மருந்துகளின் விலை 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்- டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மருந்துகளின் விலை உயர்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.