கணவரின் பழக்கத்தால் பிரிந்த இரண்டு உயிர்கள்!

0
6

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி கலைவாணர் நகர்  சேர்ந்தவர்கள் அசோக் ராஜபாண்டி – ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருந்தார். அசோக் அந்தப்பகுதியில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். சென்னையில் சொந்த வீட்டில் வசிந்து வந்தனர். அசோக் ராஜபாண்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் உரையாடல் மூலம் ராஜலட்சுமி இதை உறுதிசெய்துள்ளார்.

இதுகுறித்து கணவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கணவன் – மனைவி இடையே கொஞ்ச நாள்களாக பேச்சுவார்த்தை இல்லை. ராஜபாண்டி தன் மகளிடம் மட்டுமே பேசி வந்துள்ளார். இருப்பினும் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜலெட்சுமி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜேஜேநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீஸார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here