மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மரக்காணம் அடுத்துள்ள கந்தாடு, ஆலத்தூர், நடுக்குப்பம், அசபூர், பிரம்மதேசம் ஆகிய கிராமங்கலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வருகின்றனர். 

பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு மாணவர்கள் பயணம் மேற்கொள்வதால் விபத்தில் சிக்கும் சூழ்நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளி முடியும் நேரங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாணவர்களுக்கு எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும் மாணவர்கள் அதனை அலட்சியபடுத்திவிட்டு ஆபத்தான முறையிலேயே பயணம் மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here