‘மாண்டஸ்’ புயல்…. மின்சார ரெயில் சேவை பாதிப்பு!

0
7

சென்னை:

‘மாண்டஸ்’ புயல் நேற்று கரையை கடக்கும் போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் தொடர் கனமழை பெய்தது. ஏற்கனவே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈ.சி.ஆர். சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு இருந்து.

இந்த நிலையில் சென்னை மக்கள் மின்சார ரெயில் சேவையை பெரிதும் நம்பிருந்தனர்‌. ஆனால் புயலின் தாக்கம் நேற்று இரவு 9 மணி முதலே தீவிரம் அடைந்ததால், ரெயில் நிலையங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து புறநகர் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன‌. இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு திரும்ப ரெயில் நிலையம் வந்த பயணிகள் ரெயில் நிலையங்களில் காத்து கிடந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here