இது குறித்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
ஏற்கனவே இங்கு 3 பிரிவுகளில் 1,200 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க உயர் சிகிச்சை கட்டிடத்தில் 6 தளங்களும், புதிய அவசர சிகிச்சை கட்டிடத்தில் 6 தளங்களும் கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 1,250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.அவற்றில் 900 ஆக்சிஜன் படுக்கைகள் ஆகும். மேலும் இங்கு, கூடுதலாக ஆக்சிஜன் நிரப்பும் வசதியும், கழிவறை மற்றும் பிற வசதிகளும் அடங்கும். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கூடுதலாக 4 கொரோனா பராமரிப்பு மையங்களும், 4 பரிசோதனை மையங்களும் நிர்வகித்து வருகிறது. கொரோனா நோயாளிகளை கண்காணிக்க இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.