தமிழகத்தில் நேற்று 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 3,06,652 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் என கூறப்பட்டுள்ளது.