தூத்துக்குடி:
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் சாலை விபத்தில் நேற்று பலியானார் அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் . முத்துராஜ் (53) , நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் அருகே அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பலியனார்.
அவரது உடலுக்கு நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.