தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து 50 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொன் விழா கொண்டாடும் வகையில் திருநெல்வேலி சரகத்தில் பணிபுரியும் பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவேஷ் குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  முன்னிலையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாநகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது,11வது மற்றும் 12வது பிரிவு பட்டாலியன் ஆகியவற்றில் பணி புரியும் பெண் காவல்துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
முதல் நாளான (17.04.2023) நடைபெற்ற பெண் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை பெண் காவலர்  செலின் பிரபா முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர் . ஆதிலட்சுமி இரண்டாவது இடத்தையும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் . ஆரோக்கிய ஜென்சி மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
 
அதே போன்று கார்பன் (Carbine) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. ராமலட்சுமி முதலிடத்தையும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் . இளவரசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. ஜானகி ஆகியோர் இரண்டாவது இடத்தையும், திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. கற்பக ராஜலட்சுமி மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
 
மேலும் பிஸ்டல் (Pistol) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் திருமதி. பூபதி முதலிடத்தையும், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. வளர்மதி இரண்டாவது இடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் செல்வி. குருகிருத்திகா மூன்றாவது இடத்தையும்  பிடித்து வெற்றி பெற்றனர்.
 
இரண்டாம் நாள் (18.04.2023) நடைபெற்ற திருநெல்வேலி சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் . பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் . கேல்கர் சுப்ரமன்யா இ.கா.ப ஆகியோர் முதலிடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பட்டாலியன் உதவி கமாண்டன்ட் திருமதி. பூபதி அவர்கள் இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . சுரேஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
 
அதே போன்று பிஸ்டல் (Pistol) ரக துப்பாக்கி சுடும்போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் . பிரவேஷ் குமார் முதலிடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமன்யா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் திருமதி. பூபதி மூன்றாவது இடத்தையும்  பிடித்து வெற்றி பெற்றனர்.
 
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் . பிரவேஷ்குமார் இ.கா.ப  முதலிடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமன்யா 2வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் திருமதி. பூபதி  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர்  பிரவேஷ் குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
 
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர். ஸ்டீபன், காவல் ஆய்வாளர் . விவேக் ராஜன், உதவி ஆய்வாளர்கள் . கோகுலகுமார் மற்றும் பாஸ்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர். சுனைமுருகன் தலைமையிலான தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here