திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி கிராமத்தில் உலக விளையாட்டு தினமான இன்று இந்த நிகழ்வை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செந்தில்நாதன் செகண்ட் இன் கமெண்டெட் சி.ஆர்.பி.எஃப் தமிழ்நாடு மற்றும் எஸ்.பாபு சமூக சேவகர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செந்தில்நாதன் பேசுகையில்:
தற்போது குழந்தைகள் கொரானாே வைரஸினால் முடங்கி கிடக்கின்றன அவர்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டுமென்றால் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது அதிலும் தமிழ் விளையாட்டான சிலம்பும் விளையாட்டு நன்றாகவே இருக்கிறது. இந்த விளையாட்டில் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இந்த தற்காப்பு கலையை கற்க வேண்டும் இதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவில் சிலம்பும் வகுப்பின் மாஸ்டர் தமிழச்சி பிரீத்தா ராசன் தமிழச்சி ரீத்தா ராசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவர்களுக்கு சான்று மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தனர் இந்த விழாவிற்கு ஊர் பெரியவர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்து வாழ்த்திச் சென்றனர்.