வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமையை கடை ஞாயிறு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய தினமான சனிக்கிழமை இரவு குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், திருமணம் நடைபெற வேண்டும் பெண்கள் கோயிலில் உள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் படுத்து உறங்குவா். அவா்களது கனவில் சுவாமி அருள்பாலிப்பாா் என்பது ஐதீகம். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இந்த திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.