பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மும்பையில் இருந்து கோவாவுக்கு கிளம்பிய கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து கப்பலுக்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போதைப் பொருள் பார்ட்டி தொடர்பாக ஆர்யன் கானிடம் 7 மணிநேரம் விசாரணை நடந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட மேலும் ஒரு நடிகரின் மகனையும் அதிகாரிகள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ஆர்யன் கான் விவகாரம் குறித்து அறிந்ததும் சமூக வலைதளவாசிகள் அவரை பற்றி ட்வீட் செய்கிறார்கள். இதனால் #AryanKhan என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. ஆர்யன் கான் போதைப் பொருள் விஷயத்தில் சிக்கியதில் ஆச்சரியம் என்னவிருக்கிறது. பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்பாடு எல்லாம் சர்வ சாதாரணம் என்கிறார்கள் ரசிகர்கள்.