சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள புனித குழந்தை தெரசாள் ஆலயம், செஞ்சை பங்கு குருத்தோலை பவனியானது, செஞ்சை ஊரணி தென்கரையிலிருந்து இறைமக்கள் பவணியாக குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு, தாவீதின் மகனுக்கு ஓசன்னா என்று முழங்கியவாறு ஆலயத்திற்கு சென்றார்கள், இந்த சிறப்பு திருப்பலியானது அருட்தந்தை மார்ட்டின், தே பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை, மற்றும் பங்குத்தந்தை அருள் முனைவர் ஜான் பிரிட்டோ அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இறை மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று திருப்பலியை சிறப்பித்தனர்.