9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை!

13
9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை!
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை பள்ளியில் சுமார் 112 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை பின்  தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here