சாத்தான் குளம் கொலை வழக்கு என்ன ஆனது?!
மதுரை:
தூத்துக்குடி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கின் விசாரணைக்காக மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு கடந்த டிச. 10ம் தேதி வந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசியுள்ளார்.
அப்போது அவர் ரூ.36 லட்சம் வழங்குமாறு கேட்டு மிரட்டியுள்ளார். அன்றைய தினம் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் துறையினர் செய்தியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.
இதே நிலை நீடித்தால் சாட்சிகளையும் மிரட்டி கலைக்க வாய்ப்புள்ளது. எனவே, விசாரணையை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நேற்று விசாரித்த நீதிபதி முரளி சங்கர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் இரட்டை கொலை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.