பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்ததை அடுத்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து மீண்டதை அடுத்து அவர் கடந்த 31-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவர் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளார். அவருக்கு ஓசூரில் இருந்து, சென்னை வரை சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியுடன் அவர் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு குவிந்து வருகிறார்கள். அந்த விடுதி முன்பு சசிகலாவை வரவேற்று பெரிய பேனர்களை வைத்துள்ளனர்.
நாளைய தினம், சசிகலாவை போலீசார் அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்து சென்று விட திட்டமிட்டு உள்ளனர்.