மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மத்திய அரசின் வேளாண்மை சட்டம் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அக் கட்சியின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் சமத்துவ மக்கள் கழகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.