சென்னை:

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களை கழக மகளிர் அணி நிர்வாகிகள் மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறப்பு அழைப்பாளர்களும், திருமதி லதா நாராயணன் அவர்களும் சுகன்யா கார்த்திக் அவர்களும் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர் அவர்களுக்கு கழக மகளிர் அணி நிர்வாகிகள் சார்பாக சால்வை நினைவு பரிசு வழங்கப்பட்டது . நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெண்களுக்கு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கி சிறப்புரையாற்றினார். வட சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி நிர்வாகிகள் மீனா, ஆனந்தி, விஜயலட்சுமி, லெசி, அனிதா, ராஜ புஷ்பம், இளங்காவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சி முன்னதாக நடன கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன் தலைநிலையைச் சேர்ந்த தங்கமுத்து தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் தேவி கொள்கை பரப்பு செயலாளர் முனிஸ்வரன் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பாஸ்கர் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ் வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் கே கே சீனிவாசன் கழக நிர்வாகிகள் ராஜேஷ் தங்கதுரை சாபுதீன் தாஸ் வேல்முருகன் பாக்யராஜ் சங்கர பாண்டியன் மற்றும் ஏராளமான கழக பேரவை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here