பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சேர்ந்த 560 பழங்குடியின குழந்தைகளுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் சேவா குட்டீர்களை உள்ளடக்கிய ‘என்.ஜி.ஓ பரிவார்’ உடன் சச்சின் இணைந்துள்ளார். செஹோர் மாவட்டத்தில் உள்ள செவானியா, பீல்பதி, காபா, நயபுரா மற்றும் ஜமுன்ஜீல் ஆகிய கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் இப்போது டெண்டுல்கரின் அறக்கட்டளையின் உதவியுடன் ஊட்டச்சத்து உணவும், கல்வியும் பெறுகிறார்கள்.

இந்த குழந்தைகள் பெரும்பாலும் பரேலா பில் மற்றும் கோண்ட் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். “சச்சினின் இந்த முயற்சி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கல்வியறிவின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடி குழந்தைகள் மீதான அவரது அக்கறைக்கு சான்றாகும்” என்று சமீபத்திய ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட டெண்டுல்கரின் இந்த பணியானது, குறிப்பாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பழங்குடியின  குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான உணவை கருத்தில் கொண்டு செயல்படுகிறது.

யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக, டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அவ்வப்போது தவறாமல்  பேசி வருகிறார். சச்சின் குழந்தைகளுக்காக பல்வேறு நல்ல முயற்சிகளை செய்து வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள SRCC குழந்தைகள் மருத்துவமனையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க அவர் நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2019 டிசம்பரில் டெண்டுல்கர், ‘ஸ்ப்ரெடிங் ஹேப்பினஸ் இண்டியா’ என்ற அறக்கட்டளை மூலம், டிஜிட்டல் வகுப்பறைகளை இயக்குவதற்கு பசுமை ஆற்றலை வழங்கும் சூரிய ஒளி விளக்க அமைப்புகளை வழங்கினார்.

மேலும் மும்பையின் பிவாலியில் உள்ள ஸ்ரீ காட்ஜ் மகாராஜ் ஆசிரம பள்ளியில் “நவீன கற்றல் வழிமுறைகள் மற்றும் விளையாட்டு வசதிகளை தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here