நடிகர்கள் : ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதாரவி, அபு கான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கெளசல்யா,
இசை : பைஜு ஜேக்கப்
இயக்கம : ஜெயச்சந்திரன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
விமர்சனம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராமத்தில் வாழும் மக்கள் வெளியூர் வாசிகளுக்கு அனுமதி இல்லை. உள்ளூர் ஆட்களும் அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியே செல்லவும் முடியாது. என்று ராணுவக் கட்டுப்பாட்டுடன் நேர்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.
கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அந்தக் கிராமத்துக்குப் பிரச்சனை வருகிறது.
அரசியலில் நுழைய அமைச்சர் மக்களுக்கு எதிரியாகிறார். அதன் பின் என்னவெல்லாம் அந்த கிராமத்தில் நடக்கிறது? கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணம் என்ன? என்பதே ’சான்றிதழ்’ படத்தின் மீதிக்கதை….