முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் காவல் துறையில் 81 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் பேச்சு விவரம் வருமாறு:

இரவு பணிக்கு செல்லும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ளவர்களுக்கு சிறப்பு படி மாதம் ரூ.300 வழங்கப்படும்.

வார விடுமுறை போலீசாருக்கு மட்டும் உள்ளது என்பதை இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். இதன்மூலம் 10,508 பேர் பயனடைவார்கள். மூன்றாவதாக இணைய தள சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிரை மாய்த்து கொள்வதற்கான காரணங்களை அறியும் பொருட்டு மாநில குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here