பாலூட்டும் தாய்மார்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, அவர்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட இடம் இல்லாமல் அவதிப்படுவதை போக்கும் வகையில் சென்னை காவல்துறை மற்றும் ஜஸ்டீஸ் மிஷன் இணைந்து தாய்மார்கள் பாலூட்டும் அறையினை நிறுவ திட்டமிட்டனர்.
அதன்படி முதற்கட்டமாக காவல் ஆணையர் அலுவலகம், ஆயிரம் விளக்கு காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, வடபழனி முருகன் கோவில், பெசன்ட் நகர் மாதா உட்பட 8 இடங்களில் நிறுவ உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவன நிர்வாகி ஸ்னேகா ஆகியோர் பாலூட்டும் அறையினை துவக்கி வைத்தனர்.