ரோமியோ திரைவிமர்சனம்
மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி யை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், மிர்னாலினி க்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, விருப்பம் இல்லை என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர் என்ன செய்தார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
புதிய காட்சிகள் எதுவும் இல்லாததால் ஒரு அளவுக்கு மேல் பொறுமையை சோதிக்கின்றன. விஜய் ஆண்டனி மிகவும் இயல்பாக நடித்திருந்தாலும் அவர் இயல்பாக இருக்கிறாரா அல்லது படத்திற்காக ஓவர் ஆக்டிங் செய்கிறாரா என்பதை வித்தியாசப்படுத்தி பார்க்க முடியவில்லை டா சாமி.
மிருணாளினியின் லீலா கேரக்டர் வலுவில்லாததால் அவரது நடிப்பும் சொதப்பல். விஜய் ஆண்டனி பாடிய பாட்டு நல்லா இருக்கும் என்று கேட்டால் அது இதை விட கொடுமையப்பா…. பின்னணி இசை பரவாயில்லை. விஜய் ஆண்டனிக்கு ஆலோசனை சொல்லும் யோகி பாபு கேரக்டர் எதுக்கு வச்சிங்க? என்ற கேள்வி எழுகிறது.
காமெடி எதுவுமே எடுபடவில்லை. தங்கச்சி காட்சி இந்த 2024 -ல் அப்படி ஒரு கலவரம் எங்கேயாவது நடக்குமா? என டைரக்டர் சிந்திக்க வேண்டாமா? கிளைமேக்ஸ் காட்சி ஓகே. ஆனால் படத்தின் நீளத்தை இன்னும் குறைத்து கதையை சுருக்கென்று சொல்ல வந்திருக்கலாம். விஜய் ஆண்டனி இனிமேல் கதையை தேர்வு செய்யும் முன் நிதானமாக லாஜிக் கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் ரசிகர்களிடமிருந்து வரவேற்பு வரும் இல்லையென்றால் ……….?
ரோமியோ- காதலுக்கே தலை வலி