நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு சொந்தமான ஆஸ்ரம் பள்ளியில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.கிண்டி, வேளச்சேரி பிரதான சாலையில், ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளி உள்ளது.
இதை, அவரது மனைவி லதா நிர்வகித்து வருகிறார். இங்கு, 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு, ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.அவர்கள் நேற்று, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து, எந்த பதிலும் வராததால், மாலை, பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின், பள்ளி நிர்வாகம் அவர்களை அழைத்து பேசியது. இதையடுத்து, முதற்கட்டமாக, ஏழு மாத ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.