உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என பல கோடி ரசிகர்கள் ஒரே நேரத்தில் கோஷமிடுவார்கள். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 3 தலைமுறையினருக்கு சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்து வரும் நிலையில், நாளை அவர் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
ஆண்டுதோரும் டிசம்பர் 12ம் தேதி என்றாலே உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் கூட்டத்தினரால் பல வகையான வாழ்த்து மடல்கள் குவியும் என்பது அனைவரும் அறிந்தது. அதிலும், சர்ச்சையில் இருந்து தப்பிக்கத் துடிக்கும் ரஜினிகாந்தை மேலும் சர்ச்சையில் தள்ளி விடும் வகையிலேயே இருக்கின்றன இந்த மாதிரியான போஸ்டர்கள்.
இந்த நிலையில், மதுரையில், திருவள்ளுவர் போட்டோவில் ரஜினி முகத்தை மார்ஃப் செய்து காவி உடை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதில் தலைப்பு வேறு, “வாழும் வள்ளுவரே!” என அடித்துள்ளனர்.
இந்த மாதிரியான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி இது என்ன டா? எங்க தலைவருக்கு வந்த சோதனை என்றெல்லாம் கமெண்ட் செய்து இணையத்தை ரசிகர்கள் தெரிக்கவிட்டு வருகின்றனர்.
இது ரஜினிக்கு வந்த வேதனையா? திருவள்ளுவர் அய்யாவுக்கு வந்த சோதனையா? என்று புரியவில்லை. ரசிகர்கள் தனது மனதில் மட்டும் இது போன்ற சினிமாகாரர்களை வைத்து கொண்டால் சிறப்பாக இருக்கும், ரஜினிகாந்த் இது போன்ற செயலை ஆரம்பத்திலேயே தனது ரசிகர்களை கட்டுபடுத்த தவறினால் பின்பு விளைவுகளை கடுமையாக சந்திக்க நேரிடும். என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.