நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆக.10-ல் திரையரங்குகளில் வெளியானது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். நேற்று காலை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்தார். இதயனையடுத்து மாலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் துணை முதல்வருடன் ரஜினி படம் பார்த்தார். 

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதியநாத் இல்லத்தில் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரஜினியின் விடியோ இணையத்தில் வைரலானது. ரஜினி செய்தது தவறெனவும் ரஜினி செய்தது தவறில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

“தன்னைவிட வயதில் குறைந்தவர் காலில் விழுவது சரியில்லை”, “காலா படத்தில் நடித்த ரஜினியா இது?” “சுயமரியாதை என்பது இதுவா?” என இணையவாசிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் யோகி ஆதியநாத் துறவி போன்றவர் அவரது காலில் விழுந்தது தவறில்லை எனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் அது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மொத்தத்தில் ரஜினி அன்று முதல் இன்று வரை எது செய்தாலும் உற்று பார்க்கும்  ஒரு ஈர்ப்பு மனிதர் என்பதில் ஐயமில்லை.

எமது நிருபர் S.கோபி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here