சென்னையில் கவர்னர் ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இருவரும் அரசியல் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்தார். பின்னர் நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:

மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவருடன் 25 முதல் 30 நிமிடம் வரை பேசினேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவிலேயே இருந்தவர் கவர்னர். அவர் தமிழகத்தை மிகவும் நேசித்துள்ளார். முக்கியமாக தமிழ் மக்கள், அவர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை கவர்னருக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற ஆன்மிக உணர்வு அவரை ரொம்பவே ஈர்த்துள்ளது. தமிழகத்தின் நல்லதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். அரசியல் பற்றியும் கவர்னருடன் விவாதித்தேன், அது பற்றி இப்போது பகிர முடியாது. மீண்டும் அரசியல் வரும் திட்டமில்லை. ஜெயிலர் படப்பிடிப்பு 15ம் தேதி அல்லது 22ம் தேதி துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பார்லிமென்ட் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘அது பற்றியெல்லாம் உங்களிடம் பேச முடியாது. நன்றி’ என்றார். அதேபோல், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு குறித்து கேட்டதற்கு,சற்று யோசித்து பதில் ஏதும் சொல்லாமல் பின்னர் ‘கருத்து கூற விரும்பவில்லை’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here