வெப்பசலனத்தின் காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், பிற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.