அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

திருவான்மியூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அம்பத்தூர், ஆவடி, குரோம்பேட்டை, தாம்பரம், ஊரப்பாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக இடியுடன் மழை பெய்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்கள் தற்போது பெய்துவரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல, கோவை, சேலம், ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் காற்றுடன் லேசான மழை பெய்தது. ஆகையால், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, லாலாபேட்டை, பிள்ளபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பககுதிகளில் நள்ளிரவு 1 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தும், மின்சார கம்பிகள் தாழ்வாக செல்வதால் லேசான காற்றுடன் மழை பெய்தால் இதே போல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கரூர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓசூர் ,பாகலூர், சூளகிரி, உத்தனப்பள்ளி தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here