தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக செந்தமிழ்செல்வன் பொறுப்பேற்றார். சென்னை தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக குகநேசன் நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில், அவர் துணை பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட செந்தமிழ்செல்வன் நேற்று பொறுப்பேற்றார். இவர், கோல்கட்டாவில் உள்ள பொறியியல் நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். சென்னை அண்ணா பல்கலையில் முதுநிலை பட்டம் பெற்றார்.
கடந்த 2007ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று, ரயில்வே பணியில் சேர்ந்தார். சென்னை கோட்டத்தில் மூத்த கோட்ட பொறியாளராகவும், துணை பொது மேலாளராகவும், பொது மேலாளரின் செயலராகவும் பணியாற்றி உள்ளார்.