நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்து வாக்களித்தார்.தமிழக சட்டமன்ற தேர்த்லுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச் சாவடிக்கு வருகை தந்த ரஜினி. தனது வாக்கைப் பதிவு செய்தார்.
இந்நிலையில், திருவான்மியூரில் முதல் வாக்காளராக வாக்குப்பதிவு செய்தார் நடிகர் அஜித். நடிகர் கமல் தனது இரு மகள்களுடன் வந்து வாக்களித்தார். இதேபோல தமிழகம் முழுவதும், திரை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர்.