பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக ஒரு பெண் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீஸ் அதிகாரி சசிபூஷன் சின்ஹா என்பவர் புகார் அளிக்க வந்த பெண்ணிடம், தனக்கு தக்கு மசாஜ் செய்யுமாறு கூறியுள்ளார். அந்த பெண்ணும் அவர் சொன்னதை போலவே அதிகாரிக்கு மசாஜ் செய்து உள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அதிகாரி சசிபூஷன் சட்டை அணியாமல் அமர்ந்து உள்ளார். அந்த பெண் அவருக்கு மசாஜ் செய்துக்கொண்டிருக்கிறார். இப்படி புகார் அளிக்க வந்த பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரியின் வீடியோ தற்போது வைரலானதையடுத்து, போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வீடியோ எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழும்பிய நிலையில், போலீஸ் அவுட்போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.