நாகர்கோவிலில் நடைபெற்ற மோதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் கொடுத்த புகாரின்பேரில் பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், பொதுச்செயலாளர் ஜெகநாதன், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, நிர்வாகிகள் மகாதேவன்பிள்ளை, மாதவன், கிருஷ்ணன், ஆறுமுகம் மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் என மொத்தம் 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களில் பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நெல்லை மாவட்ட முன்னாள் தலைவர் மகாராஜா, குமரி மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 11-ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டுபோய் அடைக்கப்பட்டனர்.