நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் திருப்பி செலுத்தக்கூடிய வகையில் பணி மூலதன கடனாக ரூ.10.000 வரை வழங்கும் திட்டம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் பாரதப் பிரதமரின்  ஆத்ம நிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.

தற்போதுவரை 94,430 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 35,398 விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 29,706 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் உதவி தொகையை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வங்கி அலுவலர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here