மீன் பிரியர்கள் அதிர்ச்சி!!!!!
சென்னையில் விற்பனையாகும் ஏழு வகை மீன்களில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள இன்றியமையாத அவசியமாக உள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் விற்பனையாகும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கான், சுறா உள்ளிட்ட 7 வகை மீன்களில் தசைகளில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.
இந்த மீன்களால் புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கடலியல் ஆய்வாளர் கள் எச்சரிக்கின்றனர்.இறைச்சிகளை விட மீனில் அதிக சத்துக்கள் இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் மீனை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இவ்வாறு மீன்களுடன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.