பீட்சா 3 படம் எப்படி இருக்கு?!

0
9

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் CV குமார் தயாரிப்பில், மோகன் கோவிந்த் இயக்கதில், அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “பீட்சா 3″

நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் நளன் (அஸ்வின்), காவல் ஆய்வாளர் பிரேமின் (கவுரவ்) தங்கை கயலை (பவித்ரா) காதலிக்கிறார். நளனின் உணவகத்தில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன.

அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் நளன் மீது 2 கொலைப் பழிகள் விழுகின்றன. நாயகனைச் சுற்றி தொடர்ந்து கொலைகளும் அமானுஷ்யங்களும் நடக்க ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் பேய் அல்வா செய்து வைக்கிறது. பிறகு என்ன நடந்தது? அந்த பேய் யார்? என்பதே மீது கதை…. 

அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் அந்த நவீன உணவகத்துக்கான கலை இயக்கம், இரவில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ‘ஹாரர்’ உணர்வைக் கடத்துகின்றன.

ஒளிப்பதிவில் இருள் நிறைந்த காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ். குழந்தைகள் மேல் நடக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகள் குறித்து படம் பிளாஷ் பேக்கில் சொல்லியிருப்பது சிறப்பு.

பின்னணி இசை மற்றும் பேய் யின் உடை படத்திற்கு சரிவு…..

RATING: 3/5 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here