2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமனுஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தினை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார்.
‘பிச்சைக்காரன் 2′ படத்துக்கான கதை, திரைக்கதையை முடிந்த விஜய் ஆண்டனி பாரம்’ படத்துக்காகத் தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.. விஜய் ஆண்டனியே தயாரித்து நடிக்க தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இயக்குநர் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன், ப்ரியா கிருஷ்ணசாமிக்குப் பதிலாக பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடைய பணி விஜய் ஆண்டனிக்கு மிகவும் பிடித்திருக்கவே இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்துமே விஜய் ஆண்டனி தான். இயக்குநர் பொறுப்பை மட்டுமே ஆனந்த் கிருஷ்ணன் கவனிக்கவுள்ளார். இதற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.