திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனார். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு தேவையான பேருந்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டியிருந்து.
மேலும், பக்தர்களுக்கு வசதிகள் குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டியிருந்தது. படிக்கட்டு பாதை மற்றும் யானைபதைகளில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டியிருந்தது. ரோப்கார், விஞ்ச், படிக்கட்டு பாதைகளில் மருத்துவ அவசர ஊர்தி வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்து. பக்தர்கள் சுவாமி தரிசம் செய்ய தேவையான வசதிகள் சிறப்பாக மேற்கொள்ப்பட்டியிருந்து.
சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கும்பாபிஷேகத்தின் போது ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்திற்கு பூ தூவப்பட்டது, 3 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தினை கண்டுகளித்து சுவாமி தரிசம் செய்தனர்.பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
இவ்விழாவில், வருவாய் கோட்டாட்சியர்.சிவக்குமார், திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கே.எம்.சுப்பிரமணியன்,.ரா.ராஜசே கரன், சத்யா, ச.மணிமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் .கா.பொன்ராஜ், திண்டுக்கல் சிறுமலை வன உரிமைக்குழுத் தலைவர் நெடுஞ்செழியன்,பழனி வட்டாட்சியர் திரு.சசி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் துணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர்கள் லட்சுமி, சுரேஷ் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.