செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பெர்சவரன்ஸ் ரோவர், அங்கு ஆக்ஸிஜனை உருவாக்கியுள்ளது.

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் அடுக்கடுக்காக பல சாதனைகளை புரிந்து வருகிறது. சமீபத்தில் தன்னுடன் எடுத்துச் சென்ற சிறிய ரக ஹலிகாப்டர் ஒன்றை செவ்வாயில் பறக்க செய்து வரலாற்று சாதனை படைத்தது.

அந்த வரிசையில் தற்போது மேலுமொறு வரலாற்று சாதனையை பெர்சவரன்ஸ் படைத்துள்ளது. செவ்வாய் வளி மண்டலத்திலிருந்து குறிப்பிட்ட அளவிலான கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.

இந்த சாதனை வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக நாசா பெருமை தெரிவித்துள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள MOXIE என்று அழைக்கப்படும் ஒரு கருவியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

ஒரு கார் பேட்டரியின் அளவை ஒத்திருக்கும் இந்த இயந்திரம் கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளை பிரித்து ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here