இது 5 ஜி அலைக்கற்றையிலும் செயல்படும் வகையிலான முன்னேறிய தொழில்நுட்பம் கொண்டது. இதில் 6.5 அங்குல ஹெச்.டி. திரை உள்ளது.
 
இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாகவும் இது வந்துள்ளது. இதன் நினைவகத்திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.
 
நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. நீலம், கருப்பு உள்ளிட்ட வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.14,990. இதில் 8 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.16,990.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here