கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேசமயம், மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.