ஒன்.பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியது முதல் பல்வேறு சர்ச்சைகளை அந்நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. ஒன்.பிளஸ் நார்டு பயன்படுத்துவோரில் சிலர், தங்களின் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வரிசையில், ஸ்மார்ட்போனினை தொடர்ந்து ஒன்பிளஸ் நார்டு 2 வார்ப் சார்ஜர் வெடித்து சிதறியது.
இந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. ஸ்மார்ட்போனை சார்ஜருடன் இணைத்த சில நிமிடங்களிலேயே சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒன்.பிளஸ் நிறுவனத்தை ட்விட்டரில் தொடர்பு கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒன்.பிளஸ், மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சார்ஜர் வெடித்து சிதறியது என தெரிவித்து இருக்கிறது. தற்போது வெடித்து சிதறிய சார்ஜருக்கு மாற்றாக ஒன்.பிளஸ் சார்பில் வேறு சார்ஜர் கொடுக்கப்பட்டது.